Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

குளிச்சிட்டு இருந்தவங்களுக்கு இப்படியா நடக்கணும்…. பெண்ணுக்கு நேர்ந்த சோகம்…. நெல்லையில் பரபரப்பு….!!

நெல்லையில் மின்னல் தாக்கியதில் பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் சிந்துபூந்துறையில் கொத்தனார் வேலை பார்த்து வரும் ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவியான ராஜேஸ்வரி தினமும் அதே பகுதியிலிருக்கும் தாமிரபரணி ஆற்றில் குளிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இவர் ஆற்றினுள் குளித்துக் கொண்டிருந்தார்.

இதற்கிடையே நெல்லை முழுவதும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இந்த நிலையில் ஆற்றின் உள்ளே குளித்த அவரது மீது மின்னல் பலமாக தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதனைக் கண்ட அப்பகுதியிலிருந்த பெண்கள் அவரது உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |