Categories
கிரிக்கெட் விளையாட்டு

SRH VS RCB : 6 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தி ….’ஆர்சிபி த்ரில் வெற்றி’ ….!!

நேற்றைய ஐபில் தொடரில் , 6ஆவது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டன .

14வது  ஐ.பி.எல் தொடரின் 6ஆவது லீக் போட்டியில் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ஆர்சிபி அணிகள்  மோதுகின்றன . இந்த  போட்டியானது நேற்று , சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது  .  டாஸ் வென்ற ஹைதராபாத் அணி  பவுலிங்கை  தேர்வு செய்ததால் ,முதலில் ஆர்சிபி அணி பேட்டிங்கில் களமிறங்கியது .தேவ்தத் படிக்கல் -விராட் கோலி ஜோடி , தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினர் .ஆனால் 2 ஓவர் முடிவில் 13 பந்தில் ,11 ரன்களை எடுத்து படிக்கல் ஆட்டமிழந்தார் .இவரை  புவனேஷ்வர் குமார்  அவுட் செய்தார் .அடுத்து கேப்டன் விராட் கோலி 33 ரன்களில் 4 பவுண்டரிகள் அடித்த நிலையில்  , ஜேசன் ஹோல்டர் அவரை அவுட் ஆக்கினார். அடுத்து களமிறங்கிய ஷபாஸ் அகமது 14 ரன்கள் ,டிவில்லியர்ஸ் 1 ரன்கள் ,வாஷிங்டன் சுந்தர் 8 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

ஆனால் ஆட்டமிழக்காமல் மேக்ஸ்வெல் அணியின் ஸ்கோரைஉயர்த்த  கடுமையாக போராடினார். அவர் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்களை அடித்து அரைசதமடித்தார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின் ,நேற்று நடந்த போட்டியில் மேக்ஸ்வெல் அரை சதம் அடித்துள்ளார். ஆனால் கடைசி ஓவரில்  மேக்ஸ்வெல் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக  20 ஓவர் முடிவில் ஆர்சிபி அணி   8 விக்கெட்டுகளை  இழந்து,  149 ரன்களை குவித்தது  அடுத்து  ஐதராபாத் அணி 150 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக சஹா-டேவிட் வார்னர் ஜோடி களமிறங்கியது. சஹா 9 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்து ஆட்டத்திலிருந்து வெளியேறினார். பின் களமிறங்கிய மனிஷ் பாண்டே -டேவிட் வார்னர் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கேப்டன் டேவிட் வார்னர் 54 ரன்கள் எடுத்து அரைசதமடித்தார்  . அவர் 37 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சரை அடித்து விளாசினார். அடுத்து களமிறங்கிய  ஜானி பிரிஸ்டோ 12 ரன்களில் ஆட்டமிழக்க ,38 ரன்கள் எடுத்த மனிஷ் பாண்டே, ஷபாஸ் அகமது பந்துவீச்சால் ஆட்டமிழந்தார். பெங்களூர் அணியின் பவுலிங்கை ஆட முடியாமல் ஹைதராபாத் அணி தடுமாறியது.  அடுத்தடுத்து வீரர்கள் விக்கெட்டை பறிகொடுத்து வந்தன. இறுதியாக ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்களை தோல்வியை சந்தித்தது. எனவே ஆர்சிபி அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற போட்டியில் ஆட்டநாயகன் விருது  ஆர்சிபி அணியின் வீரரான மேக்ஸ்வெல்-க்கு  கிடைத்தது.

Categories

Tech |