Categories
லைப் ஸ்டைல்

வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிட்டால்…. பல பிரச்சினைகளுக்கு தீர்வு…!!!

இன்றைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட எல்லோரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம் என்பது தான் உண்மை. அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது. அதன்படி கருவேப்பிலையில் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. அவை என்னவென்று இப்போது பார்க்கலாம்.

காலையில் வெறும் வயிற்றில் சிறிது கருவேப்பிலை இலைகளை சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு வயிற்றை சுற்றி ஏற்படும் கொழுப்பு கரையும்.

ஒரு கைபிடி கருவேப்பிலையை உடன் ஒரு தேக்கரண்டி மிளகு சேர்த்து அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயை கலந்து, காய்ச்சி தலைக்குத் தேய்த்து வர பொடுகு நீங்கும். தலைமுடி நன்கு வளரும்.

கருவேப்பிலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை தேனில் கலந்து சாப்பிட்டு வர இதயம் வலுப்படும்.

கருவேப்பிலையை ஜூஸ் போட்டு தினமும் குடித்து வந்தால் கொலஸ்ட்ரால் குறையும்.

Categories

Tech |