ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கடந்த ஒரு வாரமாக ஜம்மு-காஷ்மீரில் துணை இராணுவப்படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். இதனால் இந்தியா முழுவதும் என்ன நடக்க போகின்றது என்ற எதிர்பார்ப்பும் , பதற்றமும் நிலவி வந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி இன்று காலை முக்கிய ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து நடந்த இன்று காலை நடைபெற்ற பாராளுமன்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார்.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை தாக்கல் செய்யப்பட்டது.இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான விவாதம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது.