Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

இந்த வருடம் பிறை ஏதும் தென்படல..! சமூக இடைவெளியை கடைபிடித்து… நோன்பை திறந்த முஸ்லீம்கள்..!!

பெரம்பலூரில் சமூக இடைவெளியை பின்பற்றி முஸ்லீம்கள் ரமலான் நோன்பினை திறந்தனர்.

ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் 30 நாட்கள் நோன்பிருப்பர். மேலும் நோன்பு இருந்து ஐந்து வேளையும் தொழுகை செய்வார்கள். ரம்ஜானுக்கு வானில் தோன்றும் பிறையை வைத்து நோன்பு தொடங்குவது வழக்கம். பிறை தென்படாத நிலையில் நோன்பை ரமலான் மாதத்தின் முதல் தேதியில் முஸ்லிம்கள் தொடங்குவார்கள். இந்த வருடம் சில மாநிலங்களில் கடந்த 12-ஆம் தேதி வரையில் நோன்பு தொடங்குவதற்கான பிறை ஏதுவும் தென்படவில்லை. எனவே நோன்பு ரமலான் மாதத்தின் முதல் தேதியில் தொடங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கொரோனாவால் ரமலான் நோன்பினை முஸ்லிம்கள் வீட்டிலேயே கடைபிடித்தனர். இந்த வருடம் ரமலான் நோன்பினை கொரோனா அச்சுறுத்தலால் வீட்டிலேயே திறக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன்படி பெரும்பாலான முஸ்லிம்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் ரமலான் நோன்பினை வீட்டிலேயே திறந்தனர். மேலும் கூட்டம் கூடாமல் முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் சமூக இடைவெளியை பின்பற்றி ரமலான் நோன்பு திறந்தனர். ரம்ஜான் பண்டிகை அடுத்த மாதம் 14-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |