குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த சீசனில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் மிகபெரிய அளவில் பிரபலமடைந்துள்ளனர். மேலும் இந்த சீசன் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகளுக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அஸ்வின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியான செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘எனது கனவு நிறைவேறியுள்ளது . ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். டிரைடெண்ட் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்குகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் புகழும் என்னுடன் இணைந்து நடிக்கிறார். கண்டிப்பாக ஒரு ஹீரோ காமெடியனாக உங்களை நாங்கள் நிச்சயம் மகிழ்விப்போம். தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்’ எனக் கூறியுள்ளார். இதையடுத்து ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.