சேலம் மாவட்டத்தில் உழவர் சந்தையில் தமிழ் புத்தாண்டையொட்டி காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி, தாதகப்பட்டி, அம்மாப்பேட்டை, சூரமங்கலம் ஆகிய பகுதிகளில் மொத்தம் 11 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழ் புத்தாண்டையொட்டி உழவர் சந்தைக்கு விற்பனைக்காக காய்கறிகளை விவசாயிகள் அதிகளவு கொண்டு வந்துள்ளனர்.
இதனால் சந்தையில் பொதுமக்கள் கூட்டம் அலை மோதியது. இதுக்குகுறித்து வேளாண்மை துறை அதிகாரி கூறியுள்ளதாவது சந்தைக்கு 842 விவசாயிகள் 201 டன் காய்கறிகள் மற்றும் 28 டன் பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர். இதனையடுத்து 55 லட்சத்து 65 ஆயிரத்து 464 காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை ஆகியது என்றும் உழவர் சந்தையில் மட்டுமே 50 ஆயிரத்து 854 பேர் வந்து பொருட்களை வாங்கிச் சென்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.