Categories
உலக செய்திகள்

இளவரசர் பிலிப் இறுதிச் சடங்கு…. மகாராணி தனியாகத்தான் இருக்க வேண்டும்…. வெளியான தகவல்….!!

இளவரசர் பிலிப் சடங்கில் மகாராணி தனியாக அமர வைக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மகாராணியார் கணவர் இளவரசர் பிலிப் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார். அவரின் இறுதிச் சடங்கு வரும் ஏப்ரல் 17ஆம் தேதி வின்ஸ்டர் கோட்டை மைதானத்தில் நடைபெறும் என்றும் கொரோனா காலகட்டம் நிலவுவதால் 30 பேர் மட்டுமே பங்கேற்க முடியும் என பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இரண்டு வாரங்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரண்மனை வட்டாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இறுதிச் சடங்கின்போது மகாராணியார் தனியாக அமரவைக்கப்படுவார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் பிரிட்டனில் கொரோனா தளர்வுகள் அமல்படுத்தப்பட்டாலும் மக்கள் கூடுவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இறுதிச்சடங்கில் சில நபர்ளே கலந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த கட்டுப்பாடு இளவரசரின் இறுதிச்சடங்கிற்கும் பொருந்தும் என்பதால் மகாராணி தனியாக அமர வைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களுக்கு அனுமதி இல்லை என்பதால் இளவரசர் பிலிப்பின் இறுதிச்சடங்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே  கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் குறித்து போரிஸ் ஜான்சன் ஆற்றிய உரையே அதிக பார்வையாளர்களை கொண்டது. ஆனால் தற்போது இளவரசரின் இறுதிச் சடங்கு அதனைத் தாண்டியும் பல பார்வையாளர்களை கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

Categories

Tech |