விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் சியான் 60 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விக்ரம் கோப்ரா, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தற்போது நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகனும் நடிகருமான துருவ் விக்ரம் இருவரும் இணைந்து சியான் 60 படத்தில் நடித்து வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Started tracking vocals for #Chiyaan60 from today. Glad to be onboard for this special movie. Wishing the best for Vikram sir and our team. #ChiyaanVikram @karthiksubbaraj @Lalit_SevenScr
— Santhosh Narayanan (@Music_Santhosh) April 14, 2021
செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது . இந்நிலையில் இந்த படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சியான் 60 படத்தின் பாடல் பணிகளுக்கான ட்ராக்கிங் தொடங்கப்பட்டுள்ளது’ என அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.