முன்னணி நடிகர் மாதவன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக சில கட்டுப்பாடு விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் திரைப்பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் கடந்த மாதம் 25ஆம் தேதி கொரோனா தொற்றால் பாதிப்படைந்த முன்னணி நடிகர் மாதவன் 14 நாட்கள் தனிமைப்படுத்தளுக்கு பின்பு தற்போது கொரோனாவில் இருந்து விடுபட்டு உள்ளார்.
இதுகுறித்து மாதவன் கூறியதாவது, “எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் தற்போது கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. தற்போது கடவுளின் அருளால் அனைவரும் ஆரோக்கியத்துடனும், நலமுடன் இருக்கிறோம். இருப்பினும் தடுப்பு நடவடிக்கைகளில் எச்சரிக்கையாக இருந்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.