நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர்களுக்கு அரியர் தேர்வு ரத்து செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால் இதற்கு உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வு எழுதாதவர்கள் தேர்ச்சி அடைய முடியாது. இதையடுத்து 8 வாரத்தில் அரியர் தேர்வுகள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.