நாகையில் 727 வழக்குகளுக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த நீதிமன்றம் மாவட்ட நீதிபதி செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தேசிய மக்கள் நீதிமன்றத்தில் குடும்ப நல வழக்கு, விபத்து காப்பீடு, நில அபகரிப்பு வழக்குகள், சிவில் வழக்குகள், காசோலை வழக்குகள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அதில் 727 வழக்குகளுக்கு ரூ. 4 கோடியே 10 லட்சத்து 14 ஆயிரத்து 116 மதிப்பீட்டில் தீர்வு காணப்பட்டது. இதில் கூடுதல் மாவட்ட நீதிபதிகள் பன்னீர்செல்வம், தமிழரசி, குற்றவியல் நீதிபதிகள் சுரேஷ் கார்த்தி, சீனிவாசன், சார்பு நீதிபதி ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான சுரேஷ்குமார் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.