மதுரையில் கட்டிட காண்ட்ராக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் ஆனையூரில் கட்டிட கண்டக்டரான சங்கர் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் திருமணம் நடைபெறும் மண்டபம் நடத்தி வந்துள்ளார். இதற்கிடையே இவருக்கு தொழில் ரீதியாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் யாருமில்லாத சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.