இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் புதிய படத்தின் பெயர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான ‘தீனா’ படத்தின் மூலம் பிரபல இயக்குனராக ஆனவர் ஏ.ஆர்.முருகதாஸ். இதைத்தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வரும் ஏ ஆர் முருகதாஸ் தயாரிக்கும் புதிய படத்தின் பெயர் வெளியாகி உள்ளது. அதன்படி பொன் குமரன் இயக்கும் இப்படத்திற்கு ‘1947’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்படத்தின் முன்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது.கூடிய விரைவில் இப்படத்தில் நடிக்க இருக்கும் நடிகர். நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தகவல் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.