நடிகர் சூரி தனது மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி கதாநாயகனாக வலம் வரும் சூரிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து அசத்தியுள்ளார். ஊரடங்கு காலத்திற்குப் பிறகு சூரி நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை.
தற்போது சூரி இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூரி தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூரியின் குழந்தைகளா இவர்கள்? நன்றாக வளர்ந்து விட்டார்களே என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.