கொரோனாவால் ஒரே நாளில் 1,84,000 பேருக்கு புதிதாக தொற்று பரவியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர் பிரதேஷ், சத்தீஷ்கார், கர்நாடகா ,மராட்டியம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதுவரை கண்டிராத புதிதாக தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 1,84,372 ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,38,73,825 ஆக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.மேலும் கொரோனாவால் சிகிச்சை பலனின்றி கடந்த 24 மணிநேரத்தில் 1,027 பேர் இறந்ததாக மத்திய சுகாதார அமைச்சகம் புள்ளி விவரம் காட்டுகின்றது.
மேலும் இந்த இறப்பின் எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 18 ஆம் தேதிக்கு பிறகு ஒரேநாளில் ஏற்பட்ட அதிகபட்ச இறப்பு எண்ணிக்கை இதுதான் என்று கூறப்படுகிறது .மேலும் பல்வேறு மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று நேற்று ஒரே நாளில் 82,339 பேர் வீடு திரும்பியதாகவும் அதில் அதிகமானோர் மராட்டியத்தை சேர்ந்தவர்கள் என்பதும் கூறப்படுகிறது.