Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இது நடத்துறாங்கன்னு புகார் வந்தா அங்கீகாரம் ரத்து…. பெற்றோர்கள் அதிருப்தி…. மதுரை மாவட்டம்….!!

மதுரையில் விடுமுறையிலும் பள்ளிகளிலிருந்து ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் மீண்டும் படையெடுக்க ஆரம்பித்திருக்கும் கொரோனாவால் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 1 முதல் 11 ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மாண மாணவியர்களுக்கு படிப்பின் மீதிருக்கும் அக்கரை இல்லாமல் போய்விடும் என்பதற்காக இணையம் வழியிலும், தொலைக்காட்சி மூலமாகவும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் தனியார் பள்ளிகள் சிலவற்றில் விடுமுறை நாட்களிலும் இணைய வழி வகுப்புகள் நடத்தப்படுவதால் பெற்றோர்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதற்கிடையே தனியார் பள்ளிகளில் வைக்கப்படும் தேர்வில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே அடுத்த வகுப்பிற்கு மாணவர்கள் செல்வார்கள் என்று மிரட்டுவதாக பெற்றோர்கள் கூறுகின்றனர். இச்சம்பவம் குறித்து முதன்மைக் கல்வி இயக்குனரான சுவாமிநாதன் குறிப்பிட்டுள்ளதாவது, ஏற்கனவே மதுரையில் சில பள்ளிகளில் இவ்வாறான பிரச்சனைகள் வந்ததால் விளக்கத்தைக் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறியுள்ளார். இதனையடுத்து தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து ஏதேனும் புகார் வந்தால் சம்பந்தப்பட்டிருக்கும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்தாக்குவதற்கும் பரிந்துரை செய்யப்படும் என்றுள்ளார்.

Categories

Tech |