தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்ததையடுத்து வாக்கு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து யார் தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஆவார் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் முதலமைச்சர் ஆவார் என்று ஹரித்துவார் ஸ்ரீ பரமானந்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
தனிப்பெரும்பான்மை 124 முதல் 134 சீட்டை பெற்று பழனிச்சாமி மீண்டும் ஆட்சியில் முதல்வராக அமர்வார். ஒரு நல்ல அரசின் நல்லாட்சி புரிந்தால் நல்ல மழை பெய்யும். விவசாயம் செழிப்பாக காணப்படும். அது போல தான் தற்போது நல்லாட்சி நடந்து வருகிறது என்றார்