Categories
உலக செய்திகள்

போதையில் தாறுமாறாக லாரி ஓட்டிச்சென்ற இந்திய வம்சாவளி.. 4 காவலதிகாரிகள் பலி.. நேற்று வெளியான அதிரடி தீர்ப்பு..!!

ஆஸ்திரேலியாவில் கடந்த வருடம் போதையில் லாரி ஓட்டிச்சென்று விபத்து ஏற்படுத்திய வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் இருக்கும் விக்டோரியா மாகாணத்தில் முகிந்தர் சிங் என்ற 48 வயது நபர்  லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி அன்று விக்டோரியா மாகாணத்தின் தலைநகரான மெல்போர்னில் இருக்கும் சாலையில் லாரியில் சென்றபோது போதை மற்றும் தூக்கக்கலக்கத்தில் இருந்துள்ளார்.

இதனால், லாரியை அவசர வழி பாதையில் திருப்பி வேகமாக இயக்கி சென்றுள்ளார். அப்போது அவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக சென்று, அங்கு நின்ற காவல்துறையினரின் வாகனத்தில் மோதியுள்ளது. இந்த கொடூர விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 காவலதிகாரிகள் உடல் நசுங்கிய நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து முகிந்தர் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவர் தொடர்ந்து சுமார் 72 மணி நேரமாக லாரியை இயக்கி வந்ததாகவும், ஐந்து மணிநேரம் மட்டும் தான் ஓய்வு எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். அதன்பிறகு அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, கடந்த ஒரு வருடமாக விக்டோரியா மாகாணத்தின் உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கிற்கான இறுதி விசாரணை நேற்று நடந்துள்ளது. அதில் முகிந்தர் சிங் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Categories

Tech |