நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆதியங்காடு பகுதியில் சிறப்பு வாய்ந்த மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக பல லட்சம் ரூபாய் போட்டு சென்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் யாரும் இல்லாத சூழ்நிலையில் உண்டியலில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் சிலர் திருடிச் சென்றுள்ளனர்.
உண்டியலில் இருந்த ரூ.1 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து வாய்மேடு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவாழ்த்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கோவில் உண்டியலில் பணம் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.