Categories
சேலம் மாவட்ட செய்திகள்

108 வலம்புரி சங்காபிஷேகம்….. கோலாகலமாக நடைபெற்ற திருவிழா…. மகிழ்ச்சியில் பொது மக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் அய்யனாரப்பன் சாமி கோவில் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள  ஜலகண்டாபுரம் பகுதியில் அய்யனாரப்பன் சாமி கோவில் அமைந்துள்ளது. அந்தக் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் நடைபெற்று அதிலிருந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெற்றுள்ளது. இதனையடுத்து அய்யனாரப்பன் சாமிக்கு சிறப்பு பூஜை, பல்வேறு பொருட்களால் அபிஷேகம் மற்றும் அய்யனாரப்பனுக்கு 108  வலம்புரி சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்துள்ளனர். மேலும் திருவிழாவில் எந்த வித பிரச்சனை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

Categories

Tech |