Categories
சினிமா தமிழ் சினிமா

எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான்…. ரைட்டர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…. எகிறும் எதிர்பார்ப்பு…!!!

எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ‘ரைட்டர்’ என்று பா.ரஞ்சித்  தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் வெளியான அட்ட கத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பா ரஞ்சித். இதை தொடர்ந்து மெட்ராஸ், கபாலி, காலா எனப் பல ஹிட் படங்களை கொடுத்த இவர் தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

இயக்குனரான பா ரஞ்சித் தயாரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.அந்த வகையில் இவரது தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ஆகிய படங்களும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் இயக்குனரும் தயாரிப்பாளருமான பா.ரஞ்சித் அடுத்ததாக தயாரிக்க இருக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

அதன்படி ‘ரைட்டர்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மனித மனங்களின் தீராத அதிகார வேட்கைக்கு பலியாகும் எளிய மனிதர்களின் எழுதி முடித்த பக்கங்களை மாற்றி எழுதுவான் இந்த ரைட்டர் என்று பா.ரஞ்சித் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |