Categories
மாநில செய்திகள்

இதுக்கு தான் அப்படி பண்ணுனேன்… கொடூரமாக கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர்… கொலையாளியின் பரபரப்பு வாக்குமூலம்…!!!

முன்விரோதம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் அமராவதியில் உள்ள ஜுடடா கிராமத்தை சேர்ந்தவர் ரமணா(65). தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அப்பளராஜூ என்பவருக்கும் இடையே  நீண்டகாலகமாக குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அப்பளராஜூ ரமணாவின் வீட்டிற்கு சென்று ரமணா மற்றும் அவரது குடும்பத்தாரான ராமதேவி(53), அருணா(37), உஷாதேவி(35), உதய்(2) மற்றும் 6மாத குழந்தை ஊர்வசி என மொத்தம் 6 பேரை கொலை செய்துவிட்டார்.

இதனையடுத்து கொலை செய்த அப்பளராஜூ தானாகவே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இதுவே இந்த கொலைக்கு முக்கிய காரணம் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |