நாகையில் குளிர்சாதன பெட்டி ஒன்று ஆதரவற்றோர்கள் பயன்படுத்தி கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
நாகை நகரத்திற்கு உட்பட்ட சவுந்தரராஜ பெருமாள் கோவில் தென் மடவிளாகம், தேசிய மேல்நிலைப்பள்ளி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களால் “அன்பு சுவர்” என்ற பெயரில் கொடுக்கப்படும் புதிய மற்றும் பழைய துணிகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆதரவற்றவர்கள் மற்றும் யாசகம் தேடுபவர்கள் இந்த அன்பு சுவரில் வைக்கப்படும் பொருட்களை பயன்படுத்தி வருகின்றனர். இது நல்ல பயனுள்ளதாக அமைந்துள்ளது.
இந்நிலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகில் குளிர்சாதன பெட்டி ஒன்றை சமூக ஆர்வலர் ஒருவர் வைத்துள்ளார். பொதுமக்கள் தங்களால் முடிந்த உணவுகளை இந்த குளிர்சாதன பெட்டியில் வைத்து விட்டு செல்கின்றனர். ஆதரவற்றவர்கள், அவர்கள் வைத்து செல்லும் பொருள் மற்றும் உணவுகளை சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். ஆதரவற்றவர்களுக்கு இந்த குளிர்சாதன பெட்டி உதவும் வகையில் வைக்கப்பட்டுள்ளது என்று அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.