நாகப்பட்டினம் மாவட்டம் புதிய பேருந்து நிலையத்தில் 18 பேரை விரட்டி, விரட்டி கடித்த நாயை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் டீ கடை உரிமையாளர் ஒருவர் நாய் வளர்த்து வந்தார். அந்த நாய் டீ கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்களை திடீரென விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது. அந்த நாய், அவர்கள் விரட்டியதும் நேராக பேருந்து நிலையத்தில் நின்று பயணிகளையும் விரட்டி, விரட்டி கடிக்க ஆரம்பித்தது. இதையடுத்து கோர்ட் வளாகத்திற்குள் வந்தது. அந்த நாயை அங்கிருந்தவர்கள் உடனடியாக அடிக்க துரத்தினர். ஆனால் அந்த நாய் தப்பித்து அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்தது.
அங்கு உள்ளவர்களும் நாயை துரத்தி விட்டனர். இதையடுத்து அந்த நாய் மீண்டும் டீக்கடைக்கு வந்து சேர்ந்தது. அப்போது அந்த நாயை அங்கிருந்த பொதுமக்கள் அடித்துக் கொன்றனர். அந்த நாய் கடித்ததில் 18 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.