ரசிகர்களின் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் டுவிட்டரில் பதிலளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ஸ்ருதி ஹாசனுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் ஏழாம் அறிவு, 3, பூஜை, வேதாளம், புலி, சிங்கம் 3 உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் பதிலளித்து வருகிறார். அதில் விரைவில் இயக்குனராவீர்களா? என்ற ரசிகரின் கேள்விக்கு ‘ஆம்’ என ஸ்ருதி பதிலளித்து உள்ளார். பின்னர் ஸ்ருதி ஹாசன் பெயரில் இருக்கும் ஹாசன் என்ற வார்த்தையில் எதற்காக 2 A உள்ளது என்ற ரசிகரின் கேள்விக்கு ‘என் தந்தை தான் அதற்கு காரணம்’ என பதிலளித்துள்ளார் .
Amazing https://t.co/9mFEsOg5jB
— shruti haasan (@shrutihaasan) April 14, 2021
மேலும் இப்படி உடனுக்குடன் ரிப்ளை செய்கிறீர்களே, இதேபோல் என் கேர்ள் ப்ரெண்ட் இருக்க வேண்டும் என நினைக்கிறேன் என்ற ரசிகரின் பதிவுக்கு ‘அது நீங்கள் அவரை எப்படி நடத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது’ என ஸ்ருதி பதில் அளித்துள்ளார். அந்த வகையில் தளபதி விஜய் பற்றி ஒரே வார்த்தையில் சொல்லுங்கள் என்ற கேள்விக்கு ‘அமேசிங்’ என ஸ்ருதி பதிவிட்டுள்ளார் . தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை ஸ்ருதிஹாசன் விஜய்யுடன் இணைந்து புலி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.