தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை குறைக்க போவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது 35 ஆயிரத்து 233 ரேஷன் கடைகள் உள்ளன. அனைத்து கடைகளிலும் ரேஷன் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரேஷன் பொருட்கள் வழங்குவது வழக்கம். இதில் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், சர்க்கரை, கோதுமை போன்ற பொருள்கள் வழங்கப்படுகின்றது. இதன் மூலம் ஏழை எளிய குடும்பத்தினர் பயன் பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெயின் அளவை குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மத்திய அரசு 20 % ஆக மண்ணெண்ணைய் வழங்குவதை குறைந்துள்ளதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அளவு குறைக்கப்படுகின்றது. இதுகுறித்து ரேஷன் அட்டைதாரர்கள் இடம் இருந்து புகார்கள் வருவதை தவிர்க்க மாவட்டம்தோறும் அறிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.