Categories
மதுரை மாவட்ட செய்திகள்

வண்ண மலர்களால் அலங்காரம்…. பிரசித்தி பெற்ற கோவில்…. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்….!!

மதுரையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் அனைவரும் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

தமிழகத்தில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் மதுரை மாவட்டத்திலிருக்கும் கள்ளழகர் கோவிலை தெரியாத நபர்களே இருக்க முடியாது. இக்கோவிலுக்கு அப்பகுதியிலிருக்கும் மக்கள் அனைவரும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுவாமியை தரிசனம் செய்ய வந்துள்ளனர்.

அப்போது பக்தர்கள் கொரோனாவை தடுக்கும் விதமாக முக கவசம் அணிந்து சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே கள்ளழகர் கோவிலில் அமைந்திருக்கும் மூலவருக்கு வண்ண மலர்களாலும், மனோரஞ்சித மாலைகளை கொண்டும் அலங்காரம் செய்யப்பட்டதால் அதனை பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

Categories

Tech |