Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மலர் தூவி மரியாதை…. கலந்து கொண்ட கட்சி தலைவர்கள்…. சிறப்பாக கொண்டாடப்பட்ட பிறந்த நாள் விழா….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் அம்பேதகர் பிறந்த நாளை முன்னிட்டு கட்சி தலைவர்கள் மாலை அனுவித்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம் அருகில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்நிலையில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். இதனையடுத்து திமுக, காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனையடுத்து அம்பேத்கர் மக்கள் இயக்கம் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை  செலுத்திய பின்பு அனைத்து மக்களுக்கும் இனிப்பு வழங்கினர். இதனை தொடர்ந்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

Categories

Tech |