Categories
உலக செய்திகள்

எலான் மஸ்க்கின் 90 களில் எடுக்கப்பட்ட புகைப்படம் வைரல் ..!!

எலான் மஸ்க்கின் 90 களில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை டுவிட்டரில் பயனர் ஒருவர் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவரான எலான் மஸ்க்  தனது 90களில்  எப்படி இருந்தார் என்ன வேலை செய்து கொண்டிருந்தார் என்ற தகவலை ட்விட்டரில் ப்ரனே பதால் என்ற நபர் வெளியிட்டுள்ளார் .அவர் ட்விட்டரில் எலான்  மஸ்க்கின் பிளாக் அண்ட் வொயிட் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் . மேலும் அந்த ட்வீட்டில் எலான்  மஸ்க் 90களில் பாலோ ஆல்டோ வில் ‘ராக்கெட் சயின்ஸ்’  எனும் வீடியோகேம் நிறுவனத்தின்’ C ++’ ப்ரோக்ராமராக  வேலை பார்த்ததாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த எலான் மஸ்க் அது தனது இரவு வேலை என்றும் பகலில் ருதேனீயும் டண்டலும் அல்ட்ரா கப்பாசிட்டர்ஸ் குறித்து ‘பின்னகில்  ரிசெர்ச்சில்’ வேலை பார்த்து வந்ததாகவும் பதிவிட்டுள்ளார். தற்போது எலான் மஸ்கின் புகைப்படம் மற்றும் அவரது ட்வீட் பதிவு வைரலாகப் பரவி வருகின்றது.

Categories

Tech |