Categories
உலக செய்திகள்

காரை இழுத்துச் சென்ற டிரக்…. இடையே வந்த பேருந்து…. நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து….!!

பிரேசிலில் நெடுஞ்சாலையில் பேருந்து மற்றும் கார் மீது டிரக் மோதி விபத்துக்குள்ளானது.

பிரேசில் நான்குவழி சாலை சந்திப்பில் பேருந்து மற்றும் காரின் மீது டிரக் மோதி தீப்பிடிக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பிரேசிலில் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள நெடுஞ்சாலையில் குறுக்கே பேருந்து திரும்பும்போது அதன் பின்னால் கார் ஒன்று வேகமாக கடக்க முயல்கிறது.அப்போது அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலையில் வேகமாக வந்த எரிபொருள் டிரக் காரில் மோதி இழுத்துச் சென்றது.

இதனிடையே பேருந்து எதிரில் வர இழுத்துச் செல்லப்பட்ட கார் பேருந்துக்கும், டிரக்குக்கும் இடையில் சிக்கி தீப்பற்றியது. இதில் காரின் ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததாலும் வாகனங்கள் வராததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே ட்ரக் ஓட்டுநரும், பேருந்து ஓட்டுநரும் காயங்கள் இல்லாமல் உயிர் பிழைத்தனர்.

Categories

Tech |