டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டதில் 6 பேர் உயிரிழந்தனர்.
டெல்லியில் உள்ள ஜாகீர் நகரில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் நள்ளிரவில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, 5 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கடுமையாக போராடி நீண்ட நேரத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த பயங்கர தீவிபத்தில் 6 பேர் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர். தீக்காயங்களுடன் படுகாயமடைந்தவர்களை தீயணைப்பு படையினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பயங்கர தீவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்தில் உள்ளனர்.