புதுக்கோட்டை மாவட்டத்தில் கிணற்றினுள் தவறி விழுந்த பசு மாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள குடுமியான்மலை பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசுமாட்டை வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் பசுமாடு அந்த பகுதியை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் தோட்டத்திற்கு இறை தேடி சென்ற போது அங்குள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளது.
கிணற்றினுள் பசுமாடு சத்தத்தைக் கேட்டு தோட்டத்தில் இருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பசுமாட்டை கயிற்றில் கட்டி உயிருடன் மீட்டுள்ளனர்.