பிரித்தானிய இளவரசர் பிலிப்பின் இறுதி சடங்கில் பங்கேற்க இளவரசர் ஹரி பிரித்தானிய வந்துள்ளார்.
பிரித்தானியாவின் இளவரசர் பிலிப்பின் பேரனான இளவரசன் ஹரி பிரித்தானியாவை விட்டு வெளியேறியதால் தாத்தாவின் இறுதி நாட்களில் அவரை சந்திக்கும் வாய்ப்பை இழந்ததாக மிகவும் வருத்தமாக கூறியுள்ளார். இந்நிலையில் இளவரசர் ஹரியின் சித்தப்பாவின் மகளான இளவரசி யூஜீனி தனது தாத்தாவான இளவரசர் பிலிப்பை கௌரவிக்கும் விதமாக தனது மகனுக்கு பிலிப் என பெயர் சூட்டியுள்ளனர்.
இதனையடுத்து தனது தாத்தாவை சந்திக்க முடியாத மனஉளைச்சலில் இருந்த இளவரசர் ஹரி தனது சகோதரியின் மகன் இளவரசர் பிலிப்பை சந்திக்கலாம் என நினைத்து அங்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து தாத்தாவின் இறுதிசடங்கில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ள ஹரி தனது சகோதரியான இளவரசி யூஜீனியின் வீட்டில் தங்கியுள்ளார். மேலும் இளவரசர் ஹரியும், இளவரசி யூஜீனியும் சகோதர சகோதரியாக மட்டுமல்லாமல் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வருகின்றனர்.