Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ஒரு மணி நேரம் பெய்த சாரல் மழை… குளிர்ந்த காற்று வீசியதால்… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக சாரல் மழை பெய்தது.

தமிழகத்தில் தற்போது வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் தற்போது மழை பரவலாக பெய்து வருகிறது. அந்தவகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

பழனியில் வெப்பத்தின் தாக்கத்தை குறைத்து சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பழனியில் சாரல் மழை பெய்தது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் அப்பகுதியில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து சற்று குளிர்ந்த காற்று வீசியது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Categories

Tech |