Categories
உலக செய்திகள்

கிறிஸ்துவ பள்ளி மைதானம்…. 11 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி…. அதிரடி விசாரணையில் போலீஸ்….!!

கிறிஸ்துவ தனியார் பள்ளி மைதானத்தில் 11 மாத குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய நாட்டில் மத்திய பெர்த் நகரில் ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவ தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அதன் பெயர் கிங்ஸ்வே கிறிஸ்டியன் காலேஜ் பள்ளி என்பதாகும். இந்தப் பள்ளியின் மைதானத்தில் ஒரு குழந்தை மர்மமான முறையில் இறந்து கிடந்ததுள்ளது. இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

அவர்கள் நடத்திய விசாரணையில் ஈஸ்டர் விடுமுறை என்பதால் எந்த மாணவர்களும் பள்ளி வளாகத்தினுள் இல்லை என்பது தெளிவாக தெரிய வந்துள்ளது. அதனால் இந்த குழந்தை பராமரிப்பு பள்ளி எப்போதும் போலவே சாதாரணமாக இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் காவல்துறையினர் பள்ளி முழுவதும் சோதனை செய்து புகைப்படங்களை எடுத்து பின்னர் அங்கிருந்து சென்றுள்ளனர்.

இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது “ஒரு குறிப்பிட்ட நபர் அவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும் குழந்தை யாருடையது ? எப்படி இருந்தது ? என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு கூடிய விரைவில் அனைத்தையும் கண்டு பிடிப்போம்” என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |