Categories
விளையாட்டு

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி …! 33 நாடுகளை சேர்ந்த …வீரர்-வீராங்கனைகள் பங்கேற்பு …!!

இந்திய ஓபன் பேட்மிட்டன்  போட்டியானது  ,அடுத்த மாதம் மே 11-ம் தேதி தொடங்கி 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.

டெல்லியில் அடுத்த மாதம் மே 11 ம் தேதி முதல் 16ம் தேதி வரை,  இந்திய ஓபன் சூப்பர் பேட்மிண்டன் ,தொடரானது நடைபெற உள்ளது. இந்த ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சுமார் ரூபாய் 3 கோடி பரிசு தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இந்தியன் ஓபன் சூப்பர் பேட்மிட்டன் போட்டிக்கு சீனா உட்பட 33 நாடுகளை சேர்ந்த, 228 வீரர்-வீராங்கனைகள் போட்டிக்கு  தங்கள் பெயர்களை பதிவு செய்தனர். இந்த போட்டியில் 3 முறை உலக சாம்பியனும் ,ஒலிம்பிக் சாம்பியனுமான கரோலினா மரின் மற்றும் நடப்பு  உலக சாம்பியனான  பி.வி. சிந்து உப்பட 33 நாடுகளை சேர்ந்த வீரர் -வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்தியாவிலிருந்து சுமார் 48 பேர் இந்த போட்டியில் பங்கு பெற உள்ளன. இந்தியாவில்  கொரோனா பரவல்  அதிகரித்து காணப்படுவதால் ,பார்வையாளர்கள்  இன்றி போட்டிகளை நடத்த, இந்திய பேட்மிண்டன் சங்கம் அறிவித்துள்ளது. அத்துடன் வெளிநாடுகளிலிருந்து வரும் வீர வீராங்கனைகள் ,கொரோனா விதிமுறைகளை பின்பற்றி , 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கவேண்டும். அதோடு மே 3,6,9 ,14ம் தேதிகளில் டெல்லி அரசு  சார்பில், போட்டியில் பங்கு பெறும் வீரர்களுக்கு  கொரோனா  பரிசோதனை கட்டாயம் செய்யப்படும் , என்று இந்திய பேட்மிண்டன் சங்கம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |