மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
காய்ந்த மிளகாய் – 4
மிளகு தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி
எலுமிச்சை – பாதிகருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் காய்ந்த மிளகாயையும், பச்சை மிளகாயையும் மிக்சியில் போட்டு அரைத்து கொள்ள வேண்டும். நன்கு சுத்தம் செய்த சிக்கனுடன் , பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் விழுது, எலுமிச்சை சாறு , உப்பு, மிளகாய்தூள், மஞ்சள்தூள் ,மிளகுத்தூள் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரிட்ஜில் 2 மணி நேரம் வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து சிக்கனுடன் கரம் மசாலா சேர்த்து பிசறி 5 நிமிடம் கழித்து வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் துண்டங்களை போட்டு பொரித்தெடுத்தால் சுவையான கிரிஸ்பி சில்லி சிக்கன் தயார்!!