தமிழகத்தில் சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் அதிகமாக வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் குளிர்ச்சியூட்டும் விதமாக கடந்த சில தினங்களாகவே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று முதல் சென்னை சென்ட்ரல், எழும்பூர், வில்லிவாக்கம், நுங்கம்பாக்கம், வடபழனி, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதையடுத்து சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு நெல்லை, தென்காசி, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை, கோவை, திருப்பூர், திருப்பத்தூர், தருமபுரி, தஞ்சாவூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 14 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.