Categories
தேசிய செய்திகள்

கட்டுப்பாடுகளுடன் வார இறுதி நாட்களில் ஊரடங்கு – அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் கட்டுப்பாடுகளுடன் வார இறுதி நாட்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக வளாகம், அருங்காட்சியகம், உடற்பயிற்சி கூடங்கள் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும். திரையரங்குகளில் 30% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது, பார்சல்களை வழங்க மட்டுமே அனுமதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |