திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சாமி தரிசனம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனிக்கு நேற்று முன்தினம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் குடும்பத்துடன் வருகை தந்தார். ரோப்கார் மூலம் அடிவாரத்திலிருந்து மலை கோவிலுக்கு சென்றார். அதன்பின் கோவிலில் நடைபெற்ற பூஜையில் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தார்.
அங்கு அவரை அறங்காவலர் குழு உதவி ஆணையர் செந்தில்குமார், பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் அப்புக்குட்டி ஆகியோர் வரவேற்றனர். அதன்பின் தங்கரத புறப்பாட்டில் அவர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்து வழிபட்டார். அப்போது பழனி நகர அதிமுக செயலாளர் முருகானந்தம், வேடசந்தூர் எம்.எல்.ஏ. பரமசிவம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.