Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொஞ்சம் கூட பயப்படாம இப்படி பண்றாங்க..! இவங்க மேல நடவடிக்கை எடுங்க… சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!

கொடைக்கானல் ஏரிச்சாலையில் அதிக வேகமாக மோட்டார் சைக்கிளில் சாகசம் செய்யும் இளைஞர்களால் சுற்றுலா பயணிகள் பயப்படுகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள நட்சத்திர ஏரி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் அருகே சுற்றுலா பயணிகள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் ஏரிச்சாலையில் குதிரை சவாரி, சைக்கிள் சவாரி ஆகியவற்றில் ஈடுபடுவது வழக்கம். கடந்த சில நாட்களாக இந்த சாலையில் அதிவேகமாக இளைஞர்கள் சிலர் மோட்டார் சைக்கிள்களில் சாகசங்கள் செய்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள் இதனால் அச்சப்படுகின்றனர். இதனால் சைக்கிளில் செல்லும் சிறுமி, சிறுவர்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே மோட்டார் சைக்கிளில் சாகசத்தில் ஈடுபடும் வரும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |