வசம்பு பிறந்த குழந்தைகளின் வீட்டில் கண்டிப்பாக இருக்கும். வசம்பை வைத்து பிறந்த குழந்தையை கூட வளர்த்து விடலாம் என்று கூறுவார்கள். இருப்பினும் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நெஞ்சே. எனவே வசம்பை அதிகம் பயன்படுத்தினால் என்ன மாதிரியான பக்க விளைவுகள் உண்டாகும் என்று இப்போது பார்க்கலாம்.
வயிறு கோளாறு சம்பந்தமாக குழந்தைகளுக்கு வசம்பை கொடுக்கும்போது அதிகமாக கொடுத்தால் வயிற்றுக் கோளாறு நீக்குவதற்கு பதிலாக வயிற்றுக் கோளாறு உண்டாகி விடும். வயிற்றுப்போக்கு ஏற்படும்.
அளவுக்கு அதிகமான வசம்பை கொடுக்கும் போது குழந்தையின் பேச்சுதிறன் வேகமாக வளர்வதற்கு பதிலாக திக்கு வாயை உண்டாக்கி விடும்.
இதய கோளாறு உடையவர்கள் வசம்பை சாப்பிடக்கூடாது. ஏனெனில் இது இதயத் துடிப்பில் மாற்றங்களை உண்டாக்கக்கூடியது.
தாய்ப்பால் கொடுப்பவர்கள் வசம்ப்பை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.