ரோலக்ஸ் கைக்கடிகாரம் மர்மமான முறையில் காணாமல் போனதால் தபால்துறை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தில் Graubünden மாகாணத்தில் ஒருவர் ரோலக்ஸ் கைக்கடிகாரம் ஒன்றை ஏலத்தில் எடுத்துள்ளார். அவர் 8000 பிராங்குகள் கொடுத்து இணையத்தில் ஏலம் எடுத்ததை அந்நிறுவனம் தபாலில் அனுப்பியுள்ளது. ஆனால் தபால் பார்சலை பிரித்துப் பார்க்கும்போது கைக்கடிகாரம் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து விசாரிக்கும்போது அது மூன்று அடுக்கில் பார்சல் செய்யப்பட்டுள்ளதால் கீழே விழ வாய்ப்பில்லை என்றும் Frauenfeld என்ற தபால் நிலையத்தில் எடைபோடும் போது இருந்தது என்பது தெரியவந்துள்ளது. ஆனால் அந்த பார்சல் Untervaz தபால் நிலையத்தை வந்து சேர்ந்ததும் மீண்டும் எடை போடப்பட்டுள்ளது. ஆனால் அப்போது 120 கிராம் குறைந்துள்ளது.
ஆகவே தபால் துறையை சேர்ந்த நபர்தான் பார்சலை பிரித்து எடுத்திருக்க வேண்டும் என்று ஏலம் எடுத்த நபர் குற்றம் சாட்டினார். ஆனால் மறுப்பு தெரிவித்த தபால்துறை காவல்துறையினரிடம் புகார் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.மேலும் ஏலம் விட்ட நிறுவனம் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க மக்கள் நேரில் வந்து பொருள் வாங்கிச் செல்வது நல்லது என அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் புகார்கள், ஆலோசனைகள் எல்லாம் ஒருபுறம் இருந்தாலும் பணம் கொடுத்து வாங்கிய கைக்கடிகாரம் எங்கே? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.