நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.
மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதனால் பல கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் 2,558 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 685 பேருக்கும், கோவையில் 534 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இந்த 3 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பால் கடும் கட்டுப்பாடு விதிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.