மகன் இறந்த துக்கத்தில் விவசாய விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பகுந்தன் கொட்டாய் பகுதியில் காசி என்ற விவசாயி வசித்து வந்துள்ளார். இவருக்கு நடராஜன் என்ற மகன் உள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகன் தற்கொலை செய்து கொண்டதால் காசி எப்போதும் வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வீட்டில் தனியாக இருந்த காசி மன உளைச்சலில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.