நாகப்பட்டினம் மாவட்டம் வெளிப்பாளையத்தில் உள்ள தியேட்டர் ஒன்றில் ரசிகர்கள் இரண்டு பேர் படம் பார்க்க சென்று உள்ளனர். இதையடுத்து படம் தொடங்கும் முன்பாக பக்கத்தில் உள்ள ஹோட்டலுக்கு சாப்பிட சென்றுள்ளனர். அப்போது ஓட்டல் உரிமையாளரிடம் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்பதால் சீக்கிரம் தோசை கொண்டுவருமாறு ஆர்டர் செய்தனர். இதையடுத்து தோசை கொண்டுவந்த சப்ளையர் இவர்களுக்கு கொடுப்பதற்கு பதிலாக வேறு ஒருவருக்கு கொடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த இருவரும் படம் ஆரம்பித்து விடுவார்கள் என்று சொல்லியும் எங்களுக்கு தோசை கொடுக்காமல் அவர்களுக்கு கொடுக்கிறாயா? என்று மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சப்ளையர் பாஸ்கரன் காதை அறுத்துள்ளார். இதில் அவருடைய காது இரண்டாகக் கிழிந்தது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார. இதையடுத்து தப்பியோடிய இருவரும் வெளிபாளையத்தை சேர்ந்த ரவுடிகள் என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்துள்ளனர். கர்ணன் படத்திற்காக காதை அறுத்த சம்பவம் பரபரப்பி கிளப்பியுள்ளது.