Categories
சினிமா தமிழ் சினிமா

அருண் விஜய்யின் புதிய படம்… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்… டைட்டில் என்ன தெரியுமா?…!!!

நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டிலுடன் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அருண் விஜய் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது ஆறாது சினம், ஈரம், வல்லினம், குற்றம் 23 உள்ளிட்ட படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய் நடித்துள்ளார் . இந்தப் படத்தில் ரெஜினா, ஸ்டெபி படேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்திற்கு சம் சி எஸ் இசையமைத்துள்ளார்.

ஆல் இன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை 11 : 11 புரோடக்சன்ஸ் கைப்பற்றியிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. ‘பார்டர்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டர் அருண் விஜய் முகமும் இந்திய மேப்பும்  கலந்தவாறு உருவாக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |