Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதுக்காக எல்லாம் சிறப்பாக செஞ்சிருக்காங்க…. பிரசித்தி பெற்ற கோவில்கள்…. தேனி மாவட்டம்….!!

தேனியிலுள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை பிறந்துள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் அமைந்திருக்கும் மூலவருக்கு சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண்டுகளித்தனர்.

இந்நிலையில் தேனி மாவட்டத்திலுள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும், வெற்றி விநாயகர் கோவிலிலும், கணேச கந்தபெருமாள் கோவில்கள் உட்பட இன்னும் சில கோவில்களில் கொரோனா கட்டுப்பாட்டுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக முக கவசத்தை அணிந்து வந்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும் பின்பற்றி சுவாமியை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |