Categories
தேசிய செய்திகள்

”370, 35ஏ சட்டப்பிரிவு இரத்து” மக்களவையில் மசோதா தாக்கல் …!!

காஷ்மீர் சிறப்பு சட்டம் இரத்து செய்த மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் தாக்கல் செய்து பேசி வருகின்றார்.

நேற்று காலை நடைபெற்ற மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா  ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்க்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்பின் சட்டப்பிரிவுகள் 370, 35ஏ ஆகியவற்றை ரத்து செய்த மசோதாவை தாக்கல் செய்தார். மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மசோதாக்களை  தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா  தாக்கல் செய்யப்பட்ட்தும் எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். தொடர்ந்து இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது.

lok sabha amit shah க்கான பட முடிவு

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.  இந்த மசோதாவுக்கு ஆதரவாக 125 வாக்குகளும் , எதிராக 41 வாக்குகளும் பதிவாகி ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி வருகின்றார். இதற்க்கு முன்னதாக பிரதமர் மோடியுடன் மத்திய அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியது குறிப்பிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |